5 சி.என்.ஜி. இன்ஜின் கார்களை ஆகஸ்ட் 2-ம் வாரத்தில் அறிமுகப்படுத்தும் மாருதி
மும்பை: இந்தியாவின் நம்பர் 1 கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி, தனது 5 சி.என்.ஜி. இன்ஜின் கார்களை ஆகஸ்ட் மாதம் 2-ம் வாரத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்கவும், பிறரை விட போட்டியில் முந்திக் கொள்ளவும் தான் இந்த முடிவு.
சி.என்.ஜி. இன்ஜின் உள்ள ஆல்டோ, எஸ்டிலோ, வேகன் ஆர், ஈகோ, எஸ். எக்ஸ். 4 ஆகிய கார்களை அறிமுகப்படுத்துகிறது மாருதி. இந்த கார்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் 2-ம் வாரத்தில் ஒரே நாளில் அறிமுகமாகிறது.
இந்த கார்களை தவிர்த்து மாருதி ஆல்டோவின் மாறுபட்ட காரான ஆல்டோ கே.10 ஐ அறிமுகப்படுத்துகிறது. ஆல்டோ கே.10 சந்தைக்கு வந்த பிறகு விற்பனை 25% அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது மாருதி.
தற்போது உள்ள ஆல்டோ ரூ. 2. 29 லட்சம் முதல் 2. 81 லட்சம் (முந்தைய ஷோரூம், டெல்லி) வரை கிடைக்கிறது. எஸ்டிலோ ரூ. 3. 20 லட்சம் முதல் ரூ. 4.10 லட்சம் வரை கிடைக்கிறது.
எரிபொருள் விலை உயர்வால் மக்களின் கார் வாங்கும் முறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் சிக்கனத்தை பொருத்தே மக்கள் கார்களை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, மக்களை கவர எரிபொருள் சிக்கன கார்களையும், மாற்று எரிபொருள்களான எல். பி. ஜி. மற்றும் சி.என்.ஜி. கார்களையும் அறிமுகப்படுத்துவது தான் புத்திசாலித்தனம். மாருதி சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications