அக்டோபரில் டாடாவின் அர்யா அறிமுகம்: விலை ரூ.10 லட்சம்

இந்த வாகனம் இங்கிலாந்தில் உள்ள தனது ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் தொழிற்சாலைக்கு டாடா அனுப்பி, உட்புறத்தில் சில மாறுதல்களை செய்து்ளது.
இன்னும் 4 வாரங்களுக்குள் இந்தக் கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் விலை ரூ.10 லட்சமாக இருக்குமாம்.
2.2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்ட அர்யா ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்ட வெகிக்கிள் போல சொகுசாகவும், மிதமான எம்.பி.வி போன்று அனைத்து வகை சாலைகளில் ஓடும் திறனும் கொண்டது.
மகிந்திரா மற்றும் டயோட்டாவின் ஸ்கார்பியோ, இன்னோவா, சைலோ ஆகியவற்றை சமாளிக்க இந்தக் காரை டாடா அறிமுகம் செய்கிறது.


Click it and Unblock the Notifications








