வாகன கடன்... சொல்லாமல் கொள்ளாமல் வட்டியை உயர்த்தும் வங்கிகள்!

இதனை வங்கிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், ஏற்கெனவே முதன்மை கடன் வீதங்களை ஏற்கெனவே உயர்த்திவிட்டன.
சமீப காலத்தில் வாகனக் கடன்களின் தேவை மக்களிடையே மிகவும் அதிகரித்து வருவதால் இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வட்டியை உயர்த்தும் வேலையில் வங்கிகள் இறங்கியுள்ளன. இது போதாதென்று வாகன உற்பத்தியாளர்களும் தங்கள் பங்குக்கு விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளனர்.
குறிப்பாக மோட்டார் சைக்கிள் விலையில் 100 சதவீத உயர்வு ஏற்பட்டுள்ளதாக நிதித்துறை ஆலோசகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பல்வேறு வகை பைக்குகளின் குதிரை சக்தியை குறைந்த அளவு கூட்டிவிட்டு, விலையை மட்டும் எக்கச்சக்கமாக உயர்த்தியுள்ளனர். 150 சிசி திறன்கொண்ட பைக்குகளுக்கு ரூ 55000 வரை விலையும், 200 சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கு ரூ 110000 விலையும் நிர்ணயிக்கும் போக்கு காணப்படுகிறது.
இருந்தாலும் இந்த விலை ஏற்றம் குறித்து கவலைப்படும் நிலையில் வாடிக்கையாளர்கள் இல்லை. இந்த ஆண்டு மட்டும் கார் விற்பனை 38 சதவிகித உயர்வு கண்டுள்ளது. கடந்த ஆண்டை விட 1.58 லட்சம் வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. இவற்றில் 90 சதவீதம் வங்கி அல்லது நிதிநிறுவனங்கள் தரும் கடன்களைக் கொண்டு வாங்கப்பட்டவையே என்பது மிக முக்கியமான விஷயம்.
வாகனக் கடன்கள் வழங்குவதில் நாட்டிலேயே எசிடிஎப்சி வங்கியும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் முன்னணியில் உள்ளன.இந்த ஆண்டு மட்டும் முறையே ரூ 1400 கோடி மற்றும் ரூ 1303 கோடியை இந்த இரு வங்கிகளும் வாகனக் கடன்களாக வழங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications








