தென் கொரியாவின் சாங்யோங் நிறுவனத்தை வாங்கிய மஹிந்திரா!

Mahindra Deal
மும்பை: தென் கொரியாவின் சாங்யோங் மோட்டார் நிறுவனத்தை 462 மில்லியன் டாலருக்கு செவ்வாய்கிழமை வாங்கியுள்ளது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம்.

ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் இந்த டீல், வரும் 2011, மார்ச்சுக்குள் நடைமுறைக்கு வந்துவிடும் என சாஹ்யோங் அறிவித்துள்ளது.

தென் கொரியாவின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று சாங்யோங். ரெக்ஸ்டன், கைரோன் மற்றும் சேர்மன் போன்ற சொகுசு ரகக் கார்கள் இதன் தயாரிப்புதான். இந்தக் கார்களை பெருமளவு சீனா, ரஷ்யா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது சாங்யோங்.

ஆனால் 2009-ல் சர்வதேச பொருளாதார மந்தம் உச்சத்திலிருந்தபோது சரிவைச் சந்தித்தது. இப்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் நிறுவனத்தை வாங்க முன்வந்தது இந்தியாவின் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் முன்னணியிலிருந்தாலும், சர்வதேச சந்தையில் அதன் தயாரிப்புகள் எதுவும் இல்லாமலிருந்தது. இந்தக் குறையைப் போக்கும் வகையில், சாங்யோங் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

இதற்காக கைமாறியுள்ள தொகை 462 மில்லியன் டாலர்கள். இனி சாங்யோங்கின் தயாரிப்புகள் மூலம் மஹிந்திராவின் பெயர் சர்வதேச சந்தையில் இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 23, 2010, 15:35 [IST]
English summary
Mahindra & Mahindra Ltd signed a deal to buy South Korea"s Ssangyong Motor Co Ltd for $464 million. The sales process to be completed in March next year. SSangyopng, a SUV maker that has been under court-led restructuring since 2009 as the global recession hit car sales. Ssanyong is the maker of Rexton and Kyron SUVs and the Chairman luxury sedan which it exports to China, Russia, Europe and the Middle East.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+