தென்னிந்தியாவில் டிராக்டர் பேக்டரிக்கு மகிந்திரா திட்டம்

2012-13ம் நிதியாண்டில் இந்த டிராக்டர் ஆலையை நிறுவும் திட்டத்தில் மகிந்திரா உள்ளதாம். இங்கு ஆண்டுக்கு 1 லட்சம் டிராக்டர்கள் தயாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மகிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ், பார்ம் பிரிவு தலைவர் பவன் கோயங்கா கூறுகையில், இந்தியாவில் தற்போது கொள்ளளவு போதுமானதாக இல்லை. எனவே புதிய தொழிற்சாலையை அமைக்க யோசித்து வருகிறோம். குறிப்பாக தென்னிந்தியாவில் எங்களது ஆலை எதுவும் இல்லாததால் அங்கு அமைக்க ஆர்வமாக உள்ளோம். தமிழகத்தையும் எங்களது மனதில் வைத்துள்ளோம் என்றார்.
தற்போது மகிந்திராவுக்கு நாக்பூர், மும்பை, ஜெய்ப்பூர், சண்டிகரில் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு மொத்தமாக ஆண்டுக்கு 2 லட்சம் டிராக்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
தற்போது அமைக்கவுள்ள புதிய தொழிற்சாலையில் மட்டும் ஆண்டுக்கு 1 லட்சம் டிராக்டர்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது மகிந்திரா.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உற்பத்திக்காக மட்டும் ரூ. 4500 கோடியை செலவிட மகி்நதிரா திட்டமிட்டுள்ளது. இதில் புதிய தொழிற்சாலை அமைக்கும் பணியும் அடக்கம்.
கடந்த நிதியாண்டில், உள்ளூர்ச் சந்தையில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 633 டிராக்டர்களை விற்றுள்ளது மகிந்திரா. கடந்த 2008-09ல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 695 டிராக்டர்களை விற்றுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டில் 46.97 சதவீத வளர்ச்சியை அது கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








