இன்று முதல் 'மாருதி ஈகோ'!

வரிகள், பதிவுக் கட்டணம் உள்பட ரூ.3 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த புதிய காரின் வடிவமைப்பு மிகவும் பாராட்டத்தக்க வகையில் உள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
டெல்லி பிரகதி மைதானில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ 2010ல் மாருதி நிறுவனத்தின் 17 தயாரிப்புகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் மாருதியின் லேட்டஸ்ட் தயாரிப்புகளான ஆர் 3 மற்றும் ஈகோ தான் பார்வையாளர்களை அதிகம் ஈர்த்தது.
ஈகோ கார் வாடிக்கையாளர்களின் நலன் கருதி குறைந்த விலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் முதல் அதிபசட்சம் ரூ. 5 லட்சம் வரை விலையில் 2 வகை மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
முதல் மாடல் இரண்டு வரிசை இருக்கைகள் கொண்டது. 5 பேர் பயணிக்கலாம். இரண்டாவது மாடல் 3 வரிசைகள் கொண்டது. 7 பேர் வரை பயணம் செய்யலாம். மாருதி ஆம்னி தயாரிப்பு நிறுத்தப்பட்ட நி்லையில் அதற்கு மாற்றாக, அதே நேரம் அழகிய வடிவில் இந்தக் கார் தயாரகாகியுள்ளது.
பாரத் ஸ்டேஜ் 4 நிபந்தனைகளுக்குட்பட்டு, உள்ளூர் வாடிக்கையாளர்களை முக்கியமாகக் கருதி இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளதாக மாருதி சிஇஓ ஷின்சோ நகானிஷி அறிவித்தார்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் தயாரிப்பிலிருந்த கார் இது. 1200 சிசி திறன் கொண்ட பெட்ரோல் கார் இது. சமயத்தில் ஆம்னியைப் போன்று வேனாகவும் பயன்படுத்திக்க கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








