ஸ்விஃப்ட், டிஸையர்... புத்தம் புதிய மாடல்கள் ரெடி!

அதற்காக, அந்த மாடலை அப்படியே விற்றுக் கொண்டிருந்தால் சந்தை கைநழுவிப் போய்விடும் அல்லவா.... எனவே ஸ்விஃப்ட் பிராண்டின் மாடலை மறுவடிவமைத்துள்ளது மாருதி நிறுவனம்.
ஸ்விஃப்டின் மூன்றாம் தலைமுறை வடிவத்தை சமீபத்தில் ஹங்கேரியில் நடந்த ஷோ ஒன்றில் வெளிக்காட்டியது மாருதி. ஸ்விஃப்ட் மற்றும் டிஸையர் மாடல்களில் இந்த புதிய வடிவமைப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய மாடல் கார்களைத் தயாரிக்க வசதியாக தனது குர்கான், மானேசர் தொழிற்சாலைகளில் அதிநவீன வசதிகளை ஏற்படுத்தியுள்ளது மாருதி.
இந்த இரு ஆலைகளில் குர்கானில் டிஸையரும், மானேசரில் ஸ்விப்டும் புதிய வடிவமைப்பில் தயாராகும். முதல்கட்டமாக வரும் ஜூலை 2011- முதல் ட
டிஸையரை தயாரிக்கிறது மாருதி. ஸ்விஃப்ட் பின்னர் மறுவடிவம் பெறும்.
இப்போது மாதத்துக்கு 10000 டிஸையர் கார்களையும், 12000 ஸ்விப்ட்களையும் மாருதி தயாரிக்கிறது மாருதி. புதிய திட்டப்படி இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கப் போகிறார்கள்.
இப்போது ஸ்விஃப்ட் புக் செய்தால் 2 மாதங்கள் கழித்தே டெலிவரி செய்யும் நிலை உள்ளது. டிஸையர் டெலிவரிக்கு 5 மாதங்கள் வரை பிடிக்கிறது!


Click it and Unblock the Notifications








