புதிய டிசைன்கள், தொழில் நுட்பத்துக்கு முன்னுரிமை தரும் மாருதி!

2009-2010ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் இதுகுறித்து மாருதி சுஸுகி தலைவர் ஆர் சி பார்கவா கூறுகையில், "இளம் திறமைசாலிகளைத் தேர்ந்தெடுப்பதில் மாருதி நிறுவனம் பெரும் அக்கறை கொண்டுள்ளது. காரணம் இப்போது நிறுவனத்துக்குத் தேவை புதிய டிசைன்கள் மற்றும் தொழில்நுட்பம்.
மாருதியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவுக்கு இதற்கு முன் ரூ 91 கோடி செலவிடப்பட்டது. இப்போது அது 173 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல இந்தப் பிரிவில் முன்பு 729 பேர் மடடும் இருந்தனர். இப்போது 968 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளனர். இது 1100 ஆக உயர்த்தப்படும்..." என்று கூறியுள்ளார்.
இப்போதுள்ள தொழில்நுட்ப குழுவை வைத்து ஏற்கெனவே உள்ள மாடல்களில் சிறு மாற்றங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும். ஆனால் கார்களின் மொத்த வடிவத்தையுமே மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கேற்ப குழுவை வலுப்படுத்தும் முயற்சியில் உள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில்நுட்பம் மற்றும் வடிவத்தில் புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளது மாருதி. மேலும் ரோதக் என்னுமிடத்தில் 700 ஏக்கரில் புதிய உலகத் தரம்வாய்ந்த சோதனை ஓட்ட மைதானத்தையும் நிறுவுகிறது.


Click it and Unblock the Notifications








