மாருதி கார்கள் விலை ரூ 7500 உயர்வு!

புதிய விலைகள் இன்று முதலே அமலுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "அனைத்து வித உள்ளீட்டுப் பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டபடியால், எல்லா மாடல் கார்களுக்கும் 1 முதல் 1.5 சதவீதம் வரை விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஆனாலும், மக்களின் அபிமானத்துக்குரிய ஆல்டோவுக்கு இந்த விலை உயர்விலிருந்து விலக்கு அளித்துள்ளோம்..." என்று கூறியுள்ளது.
கடந்த ஜூலையில் மாருதியின் மாதாந்திர விற்பனை 90,114 யூனிட்டுகள். இது கடந்த ஆண்டு ஜூலையை விட 33.45 சதவீதம் அதிகம். மொத்த விற்பனையில் கடந்த ஜூலையில் மட்டும் 100857 கார்களை விற்று சாதனைப் படைத்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம்.


Click it and Unblock the Notifications








