ஒரே மாதத்தில் 1 லட்சம் கார்கள் விற்பனை: மாருதி சாதனை!

இந்த மே மாதம் 1,02,175 கார்களை விற்பனை செய்துள்ளது மாருதி. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 79,872 கார்கள் விற்பனையானது. விற்பனையில் 27.9 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் 96,650 கார்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
இது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் படிப்படியாக அதிகரித்து, மே மாதம் உச்சகட்ட அளவான 1,02,175யை எட்டியுள்ளது.
இதில் உள்நாட்டு கார் விற்பனை மட்டும் 90,041 ஆகும். ஏற்றுமதியான கார்கள் எண்ணிக்கை 12,134. இதுவும் புதிய சாதனையே. இதற்கு முந்தைய மாதத்தை விட 33.41 சதவீதம் ஏற்றுமதியில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக 'ஏ 2' எனப்படும் சிறிய ரகக் கார்களான ஆல்டோ, வேகன் ஆர், ஸென், ரிட்ஸ், ஸ்விப்ட் மற்றும் ஏ ஸ்டார் வகைக் கார்கள்தான் அதிகமாக விற்பனையாகியுள்ளன.
'ஏ 3' பிரிவில் நடுத்தர வகைக் கார்களான எஸ்எக்ஸ் 4, டிஸையர் போன்றவற்றின் விற்பனை மே மாதத்தில் மட்டும் 60.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை எந்த கார் நிறுவனம் ஒரே மாதத்தில் இத்தனை கார்களை வி்ற்பனை செய்ததில்லை.
இந்த சாதனை காரணமாக மாருதி சுஸுகி நிறுவனப் பங்குகள் 3. 35 சதவீதம் அதிகரித்து, 1,281.45 வரை விற்பனையாகின.


Click it and Unblock the Notifications








