வாகனங்களின் எடையைக் குறைக்க மாருதி சுசுகி முடிவு

Maruti Car
இந்தியாவின் முன்னணிக் கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம் தனது தயாரிப்பு வாகன வகைகளின் எடையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

பயணிகள் கார்த் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி நிறுவன கார்களின் எடை அதிகமாக இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. தற்போது இதைக் கருத்தில் கொண்டு வாகனங்களை லைட் வெயிட்டாக்க முடிவு செய்துள்ளது மாருதி சுசுகி.

2012ம் ஆண்டு முதல் உயர் தர வலு கொண்ட ஸ்டீல்களை அது பயன்படுத்தப் போகிறது. எடையைக் குறைப்பதன் மூலம் காரிலிருந்து வெளியாகும் கார்பன் அளவையும் குறைக்க முடியும் என்பது முக்கியமானது.

இதுகுறித்து நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் எஸ்.கே.குப்தா கூறுகையில், குறைந்த அடர்த்தியுடன் கூடிய அதிக வலு கொண்ட ஸ்டீல்களைப் பன்படுத்துவதன் மூலம், எரிபொருள் உபயோகம் குறையும். இதனால் கார்பன் டை ஆக்சைடு வெளியேறுவது குறையும்.

வழக்கமான ஸ்டீல்களுக்குப் பதில் இந்த அதிக வலு கொண்ட ஸ்டீல்களை ஏ ஸ்டார் கார்களுக்கு தற்போது பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம் இந்த வகை கார்களில் கார்பன் வெளியீடு கிலோமீட்டருக்கு 150 மில்லிகிராம் என்பதிலிருந்து 109 மில்லிகிராம் என குறைந்துள்ளது. மேலும் வாகனத்தின் மொத்த எடையும் 120 கிலோ வரை குறைந்துள்ளது.

ஆண்டுக்கு 60 லட்சம் டன் ஸ்டீல்களை வாங்குகிறோம். இதில் பாதி அளவு ஜப்பான் மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம் என்றார் குப்தா.

Article Published On: Monday, September 13, 2010, 15:57 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+