இந்திய கார் சந்தையில் மீண்டும் 50 சதவிகிதத்தைப் பிடிக்க மாருதி தீவிரம்!

கடந்த ஆண்டு இந்திய கார் சந்தையில் 53.13 சதவீதத்தைக் கொண்டிருந்தது மாருதி நிறுவனம். ஆனால் இந்த ஆண்டு அது 47.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. கார் விற்பனை உயர்ந்தாலும், போட்டி நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் மாருதி தனது மார்க்கெட்டில் சரிவைச் சந்திக்க நேர்ந்தது.
குறிப்பாக டாடா, ஜிஎம், போர்டு நிறுவனங்களின் சிறிய ரகக் கார்கள் மாருதியின் தயாரிப்புகளுக்குப் பெரும் போட்டியாக முளைத்துள்ளன. வாடிக்கையாளர்களும் இந்த புதிய நிறுவனக் கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
நானோவின் மூலம் தனது சந்தை ஆதிக்கத்தை 11.89 சதவீதத்திலிருந்து 14.72 சதவீதமாக உயர்த்திக் கொண்டுள்ளது டாடா.
எனவே போட்டியைச் சமாளித்து மீண்டும் மார்க்கெட்டில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த விரும்புகிறது மாருதி. இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஷின்ஸோ நாகநிஷி கூறுகையில், 'இந்த ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் 50 சதவிகித மார்க்கெட்டைப் பிடித்துவிடும் மாருதி' என்றார்.


Click it and Unblock the Notifications








