எம்யூவி மார்க்கெட்டில் நுழையும் மாருதி, டாடா, ஸ்கோடா!

இந்தியாவில் தற்போது எம்யூவி மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. இதையடுத்தே மேற்கண்ட மூன்று நிறுவனங்களும் அங்கும் காலடி எடுத்து வைக்கின்றன. டாடா ஆரியா என்ற பெயரில் டாடா மோட்டார்ஸ் தனது முதலாவது எம்யூவி காரை அறிமுகப்படுத்துகிறது. இது டாடா ஸ்டேபிள் காரிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். அடுத்த சில மாதங்களில் ஆரிய இந்திய சாலைகளை பொறி பறக்க வைக்கப் போகிறது.
அதேபோல மாருதி ஆர்3 என்ற தனது எம்யூவி ரக காரை களம் இறக்குகிறது. அடுத்த ஆண்டு இது சாலைக்கு வருகிறது. ஸ்க்டோ தனது ரூம்ஸ்டர் எம்யூவி காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
யாரடி மோகினி படத்தில் தனுஷை காருக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு நயனதாரா குடும்பத்தினர் கும்பலாக ஜவுளிக் கடைக்குப் போவார்களே, அதுபோன்ற பெருமளவிலான ஆட்களுடன் நீண்ட தூரப் பயணத்திற்கேற்ற கார்கள்தான் இந்த எம்யூவி டைப் கார்கள். இது ஹேட்ச்பேக் கார்களுக்கும், ஸ்போர்ட்ஸ் வகை கார்களுக்கும் மத்தியில் உள்ள டைப்பாகும். இதன் முக்கிய அம்சமே, எஸ்யுவி வகை கார்களில் உள்ள அனைத்து வசதிகளும் இருக்கும் என்பதுதான். அதேசமயம், பிற கார்களைப் போல இதையும் எளிதாக கையாள முடியும்.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான எம்யூவி கார் டொயோட்டா இன்னோவாதான். செலவு குறைவு, வசதி அதிகம் என்பது இந்தக் காரின் பெருமையாகும். அதேபோல மகிந்திரா சைலோவும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு எம்யூவி காராகும்.
எம்யூவி வகை கார்கள் கடந்த ஆண்டு 1.5 லட்சம் அளவுக்கு விற்றுள்ளது. இது மொத்த கார்ச் சந்தையில் 10 சதவீதமாகும்.
டாடா ஆரியாவை புக் செய்தவுடன் வாங்க முடியுமாம். அதேசமயம், இன்னோவா வேண்டும் என்றால் புக் செய்து விட்டு குறைந்தது 3 மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஸைலோவை வாங்க விரும்பினால் 2 மாதமாகும். மேலும் இன்னோவா, சைலோவை விட ஆரியா சற்று நீளமானதாம். 7 பெரியவர்கள் வரை உள்ள போட்டுக் கொண்டு செல்ல முடியும். அதேசமயம், சரக்குகளை வைக்கவும் போதிய இட வசதி உண்டு.


Click it and Unblock the Notifications








