இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி கார்கள் விற்பனை அதிகரிப்பு

ஜெர்மனியில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டில் முதல் ஏழு மாதங்களில் மட்டும் 2,921 கார்களை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் தனது முக்கிய போட்டி நிறுவனமான பி.எம்.டபிள்யூவை பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்திய சொகுசு கார்கள் சந்தையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது மெர்சிடிஸ்.
அதே நேரத்தில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் கார்கள் விற்பனையும் 35 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதே போல ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனத்தின் கார்கள் விற்பனையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது.
கடந்த ஏழு மாதங்களில் இந்த நிறுவனம் 1,535 கார்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டு 981 ஆக இருந்தது. குறிப்பிடத்தக்கது.
பி.எம்.டபிள்யூ நிறுவனத்துக்கு சென்னையில் கார்கள் ஒருங்கிணைப்பு பிரிவு உள்ளது. இங்கு ஆண்டுக்கு 3,000 கார்களை ஒருங்கிணைக்க முடியும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்துக்கு மகாராஷ்டிர மாநிலம் சக்கானில் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஆண்டுக்கு 5,000 கார்களைத் தயாரிக்கலாம்.


Click it and Unblock the Notifications








