இந்தியா-மெர்சிடிஸ் விற்பனை 10% சரிவு

எனினும் இந்தாண்டு புதுரக மாடல்களை அறிமுகப்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவோம் என அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் வில்ஃரைட் ஆல்பர் தெரிவித்துள்ளார்.
மெர்சிடிஸின் புதிய எஸ்-கிளாஸ் சொகுசு கார், 'எஸ்500எல் லிமவ்சின்' மற்றும் 'ஜிஎல்350' ஸ்போர்ட்ஸ் ரக கார்கள் இன்று டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை முறையே ரூ.95 லட்சம் மற்றும் ரூ. 64 லட்சமாகும்.
கார்களின் அறிமுக நிகழ்ச்சியின் போது நிருபர்களை சந்தித்த ஆல்பர், '2009ம் ஆண்டில் 'பிஎம்டபுள்யூ'வை விட நாங்கள் பின்தங்கி விட்டோம் என்பது உண்மை தான்.
கடந்தாண்டு விற்பனை இந்தியாவில் 10.43 சதவீதம் குறைந்துவிட்டது. எங்களின் இ-கிளாஸ் கார்களின் இருப்பு குறைவானதே இதற்கு காரணம்.
இந்தியாவில் 2008ம் ஆண்டில் மெர்சிடிஸ் கார்கள் 3,625 யூனிட்டுகள் விற்றன. ஆனால் 2009ல் 3.247 மட்டுமே விற்பனையாகி உள்ளன. ஆனால், பிஎம்டபுள்யூ கார்கள் 2009ம் ஆண்டில் 3,619 யூனிட்டுகள் விற்றுள்ளன.
முன்னணியில் இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல லாபகரமான வளர்ச்சியை எட்ட வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டில் நாங்கள் காலடி வைக்கிறோம். 2010ல் நிச்சயம் வளர்ச்சி சதவீதம் இரண்டு இலக்கத்தில் அமையும்.
விற்பனையில் பிஎம்டபுளியூ வீழ்த்துவதற்காக எங்கள் கார்களை விலையில் மாற்றம் இருக்குமா என்பது பற்றி கூற முடியாது. அதிக கார்களை விற்பது எங்கள் நோக்கம் அல்ல. அது நல்ல வியூகமாகவும் இருக்காது. பரஸ்பர லாபகரமான வளர்ச்சியே எங்கள் குறிக்கோள்' என்றார்.


Click it and Unblock the Notifications