ஹூண்டாயை பின் தள்ளிய டாடா மோட்டர்ஸ்!

By
Tata Motors Pushes Hyundai to Third Spot
நானோ கார்களின் ஜோரான விற்பனை காரணமாக இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது டாடா மோட்டர்ஸ்.

கார்கள் விற்பனையில் இந்தியாவில் மாருதிக்கு அடுத்த நிலையில் இருந்தது ஹூண்டாய். டாடாவுக்கு 3வது இடம் தான்.

இந் நிலையில் குஜராத் சனந்த் தொழிற்சாலையில் நானோ உற்பத்தி முழு அளவில் ஆரம்பித்துவிட்டதையடுத்து அதன் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் டாடா நிறுவனம் மொத்தம் 27,811 கார்களை விற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டது. இதில் நானோ கார்களின் எண்ணிக்கை 7,704 ஆகும்.

ஹூண்டாயின் ஒட்டுமொத்த விற்பனை 27,366 கார்கள் ஆகும்.

இதே காலகட்டத்தில் மாருதி நிறுவனம் 72,812 கார்களை விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல ஜெனரல் மோட்டர்சின செவர்லே பீட் மற்றும் போர்ட் நிறுவனத்தின் பிகோ ஆகியவையும் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.

இரண்டு சக்கர வாகனங்களைப் பொறுத்தவரை ஹீரோ ஹோண்டா தான் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த நிறுவனம் 4.26 லட்சம் பைக்குகளை விற்றுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் 1.39 லட்சம் வாகனங்களை விற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, July 2, 2010, 17:10 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+