இந்தியாவில் நிஸ்ஸானின் சிறிய கார் மைக்ரா

ரூ. 3.98 லட்சம் முதல் ரூ. 5.29 லட்சம் வரை விலையுள்ள இந்தக் கார்களுக்கான புக்கிங் ஆரம்பித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் அதற்கு ஏராளமான ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்துள்ளதாக நிஸ்ஸான் தெரிவித்துள்ளது.
மைக்ரா எஸ்.இ (விலை ரூ. 3.98 லட்சம்), மைக்ரா எக்ஸ்.எல் (ரூ. 4.69 லட்சம்), மைக்ரா எஸ்.வி (ரூ. 5.29 லட்சம்) என மூன்று ரகங்களில் இந்தக் கார்கள் கிடைக்கும்.
1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட இந்தக் கார்கள் 75 பிஎச்பி திறன் கொண்டவை.
டிரைவருக்கு ஏர்பேக் பாதுகாப்பு, உயரத்தை மாற்றத்தக்க ஸ்டீரிங் வீல் என நவீன தொழில்நுட்பங்களுடனான இந்தக் காரின் 85 சதவீத பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
மிக ஸ்டைலான இன்டீரியர் கொண்ட இந்தக் கார்களை இளைஞர்களை குறியாக வைத்து களத்தில் இறக்கியுள்ளது நிஸ்ஸான்.______________________________


Click it and Unblock the Notifications








