மீண்டும் இந்தியாவில் பியூகாட் கார்கள்

முன்னதாக தமிழகத்தில் தனது தொழிற்சாலையை அமைக்க மாநில அரசுடன் இந்த நிறுவனம் பேச்சு நடத்தி வந்தது.
ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரி்க்கும் வகையில் ரூ. 4,200 கோடி முதலீட்டுடன் இந்த ஆலையை உருவாக்க பியூகாட் திட்டமிட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு மாடல் காருடன் இந்தியாவில் காலடி எடுத்து வைத்த இந்த நிறுவனம் பெரும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து இந்திய சந்தையிலிருந்து வெளியேறி இந்த நிறுவனம் இப்போது மீண்டும் கார் உற்பத்தியை இங்கு துவக்கவுள்ளது.
ஐரோப்பாவில் இந்த நிறுவனத்தின் கார்கள் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக பியூகாட் திகழ்கிறது.


Click it and Unblock the Notifications