பிரிமியர் நிறுவனத்தின் புதிய கார் ரியோ

1489 சிசி திறன் கொண்ட டர்போ டீசல் இன்ஜின் கொண்ட பிரிமியர் ரியோ கார் லிட்டருக்கு 16 கிலோ மீட்டர் வரை ஓடும் வல்லமை வாய்ந்தது. ஐந்து பேர் அமரக்கூடிய ரியோ கண்ணைக்கவரும் ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. அதன் விலையும் நம்மைக் கவர்கிறது.
பிரிமியர் ரியோ கார் பவர் ஸ்டியரிங், பவர் விண்டோஸ், சென்ட்ரல் லாக்கிங், சிடி, எம்பி 3 பிளேயர் மற்றும் குளிர் சாதன வசதியும் கொண்டது. ரியோவில் ஏ.பி.எஸ் மற்றும் அல்லாய் வீல்கள் உள்ளது. பின் சீட்கள் மடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கார்களைத் தயாரிக்கத் தேவையான உதிரிப் பாகங்களை தயாரிக்க சீனாவின் ஜொய்டே (Zoyte) குழுமத்துடன் பிரிமியர் ஒப்பந்தம் செய்துள்ளது.
சீனாவில் இந்த ரக கார்கள் ஏற்கனவே 1,00,000 விற்கப்பட்டுள்ளன. எனவே, இக்கார் இந்தியாவிலும் நல்ல வரவேற்பைப் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
ரியோவின் விலை ரூ. 6 லட்சம் இருக்கும்.


Click it and Unblock the Notifications








