இந்தியாவுக்கு வரும் புரோட்டான் கார்கள்-மகிந்திராவுடன் பேச்சு

நீண்டகாலமாகவே இந்திய கார் சந்தை மீது புரோட்டான் கண் வைத்துள்ளது. 2007ம் ஆண்டு மகிந்திராவுடன் இணைந்து கார் தயாரிப்பில் இறங்க அந்த நிறுவனம் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை.
இதையடுத்து இந்தியாவில் தனது உற்பத்தியை நிறுத்திய டேவூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த காரைத் தயாரிக்க அர்ஜென்டியும் மோட்டர்ஸ் என்ற நிறுவனத்துடன் பேச்சு நடத்தியது. அதுவும் பலனளிக்கவில்லை.
இந் நிலையில் இப்போது மீண்டும் மகிந்திரா-புரோட்டான் இடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சீனா, இந்தியா, ஈரானுக்கு உதிரிப் பாகங்களை அனுப்பி அங்கு தனது பிற நிறுவனத்தின் தொழிற்சாலையில் தனது கார்களைத் தயாரிக்க புரோட்டான் திட்டமிட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம் புரோட்டானுக்கு கார் தயாரிப்பில் உதவலாம் என்று தெரிகிறது.
மலேசியாவில் இந்த நிறுவனத்தின் கார்கள் மிக மிகப் பிரபலமானவை. இந்தியாவில் முதல்கட்டமாக தனது எக்ஸோரா, சவ்வி, சாகா ஆகிய மாடல்களை புரோட்டான் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








