ரெனால்ட் நிறுவனத்தின் செடான் கார் இன்ஃளுயென்ஸ்: விரைவில் இந்தியாவில்
பிரஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் அடுத்த ஆண்டு இன்ஃளுயென்ஸ் செடான் ரக காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
அதைத் தொடர்ந்து தனது ஸ்போர்ட் யூட்டிலிட்டி வெகிக்கிளான கோலியோஸை இந்தியாவுக்கு கொண்டு வரவுள்ளது.
அதே போல ஹோண்டா தனது சிறிய ரக காரை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய முடிவெடுத்துவிட்டது.
1.2 லிட்டர் என்ஜின் கொண்ட இந்தக் காரை ஜப்பானில் இந்த நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இதன் விலை ரூ. 5 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.
இப்போது ஹோண்டா இந்தியாவில் சிவி்க், சிட்டி, ஜாஸ், அக்கார்ட் ரக கார்களை விற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் விலை அதிகமாக இருப்பதாஸ் ஜாஸ் கார்கள் விற்பனை சூடு பிடிக்கவில்லை. இதை மனதி்ல் கொண்டு அடுத்து தான் அறிமுகப்படுத்தவுள்ள சிறிய காரின் உதிரிப் பாகங்களை முடிந்தவரை இந்தியாவிலேயே தயாரித்து அதன் விலையை குறைவாகவே வைத்திருக்க ஹோண்டா முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








