ஹோண்டா ஜாஸ் காருக்கு ரூ.40000 தள்ளுபடி!

By
Honda Jazz
ஹோண்டாவின் பிரிமியம் வகை காரான ஜாஸ் இப்போது ரூ 40000 தள்ளுபடியில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

அதுமட்டுமல்ல, இந்தக் காரின் விற்பனையை அதிகரிக்க குறைந்த வட்டியில் கடன்களையும் வழங்குகிறார்கள்.

2009-ம் ஆண்டு ஸ்டாக் முழுவதையும் க்ளியர் செய்யவே இந்த சிறப்புத் தள்ளுபடி மேளா என்கிறது ஹோண்டா நிறுவனம்.

ஜாஸின் விலை ரூ 6,98,000 முதல் ரூ 7,33,000 வரையிலான விலையில் கிடைக்கிறது.

கடந்த டிசம்பரில் மட்டும் ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா இந்தவகையில் 1099 கார்களைத் தயாரித்தது. அவற்றில் 200 கார்கள் மட்டுமே விற்பனையானதாம். எனவே மீதியுள்ள கார்கள் விற்காமல் போனால் அவை பழைய மாடலாகிவிடும் (கணக்குப்படி இப்போதே ஒரு வருடம் பழைய மாடல்தான்!). எனவே விற்றால் போதும் என்ற சூழலில் தள்ளுபடிகளை அள்ளிவிடுகிறது ஹோண்டா கார் நிறுவனம்.

இந்தக் கார்களை வாங்கத் தேவையான கடன் தொகையை 5 முதல் 5.8 சதவிகித வட்டிக்கே தருகின்றனர் ஹோண்டா டீலர்கள்.

இந்த மாத கடைசியோடு இந்த சலுகைகள் முடிந்துவிடும். அதன் பிறகு 2010 மாடல்களுக்கு 'நோ டிஸ்கவுண்ட்ஸ்!'

More from DriveSpark

Article Published On: Thursday, January 21, 2010, 11:02 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+