ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்- ஷாருக் அறிமுகப்படுத்தினார்

By
Hyundai i10 electric
டெல்லி: ஹூண்டாய் மோட்டார்சின் புதிய எலெக்ட்ரிக் மாடல் காரை நடிகர் ஷாருக்கான் டெல்லியில் அறிமுகப்படுத்தினார்.

டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற 'ஆட்டோமொபைல் கண்காட்சி'யில் ஹூண்டாய் மோட்டார்ஸ் தயாரிப்பின் ஐ10 எலெக்ட்ரிக் மற்றும் ஜெனிசிஸ் கூப் ஆகிய புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

நடிகரும், ஹூண்டாய் நிறுவனத்தின் விளம்பர தூதருமான ஷாருக்கான் இந்த புதிய மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, 'பிரகதி மைதானத்துக்கு வந்தவுடன் எனக்கு பழைய நினைவுகள் நிறைய வருகிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை இங்கு இதேபோல் ஸ்டால் நடத்தியுள்ளார்' என்றார்.

ஹூண்டாயின் பிரபல பிராண்டான சான்ட்ரோ மாடலை விட ஐ10 மாடல்களைத் தான் தற்போது அதிகளவில் விற்று வருகிறது. ஒருமாதத்திற்கு சான்ட்ரோ கார்கள் 7 ஆயிரம் யூனிட்டுகள் விற்கப்படும் நிலையில், அதைவிட விலை கூடுதலான ஐ10 மாடல் 12 ஆயிரம் யூனிட்டுகள் விற்கின்றன.

இந்த மாடலுக்கு கிடைந்த வரவேற்பையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அவசியத்தையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஹூண்டாயின் ஐ10 எலெக்ட்ரிக் மாடல் கார்களில் கார்பன் புகை முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.

பேட்டரியை ஐந்து மணிநேரம் முழுமையாக சார்ஜ் செய்தால் 160 கி.மீ தூரம் வரை காரை ஓட்டிச்செல்லலாம் என கூறப்படுகிறது.

'ஹூண்டாய் தற்போது 260 நகரங்களில், 286 டீலர்களுடன் 80 விற்பனை கிளைகளை கொண்டு இயங்கிவருகிறது. இந்தாண்டு மேலும் 60 நகரங்களை இந்த எண்ணிக்கையில் சேர்க்கவும், கிளைகளை ஆயிரத்து 340 ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம்' என ஹூண்டாய் விற்பனை பிரிவு இயக்குனர் அர்விந்த் சக்ஸேனா கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, January 8, 2010, 10:44 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+