ரூ 15.4 லட்சத்தில் ஸ்கோடா அறிமுகப்படுத்தும் 'யெடி'!

கடந்த சில மாதங்களாகவே பல முன்னணி கார் நிறுவனங்களும் சொகுசு மாடல் கார்களை முடிந்த அளவு குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. டாடா, ஹூண்டாய், ஆடி போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டு புது மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளன.
டாடா சபாரி, ஆடி க்யூ 7 போன்ற சொகுசு கார்களுக்கு தேவை அதிகரித்து வருவதாலேயே, மேலும் மேலும் புதிய கார்கள் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன.
அந்த வரிசையில் இப்போது ஸ்கோடாவின் யெடியும் சேர்ந்துள்ளது.
டெல்லியில் இதன் விலை ரூ 15.4 லட்சம். பிற நகரங்களில் சில ஆயிரங்கள் கூடுதலாக இருக்கும்.
கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்தக் கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
2 லிட்டர் டீஸல், 140 பிஎச்பி திறன் கொண்ட இந்தக் கார் இரு ரகங்களில் வெளி வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








