ரூ.40.25 லட்சத்தில் வல்வோ ஆட்டோ அறிமுகப்படுத்தும் 'எக்ஸ்சி-60'!

டி 5 ட்வின் டர்போ எஞ்ஜின் கொண்ட இந்த புதிய கார், லேசர் ப்ரேக், சுழலும் தன்மை கொண்ட ஹெட்லைட்டுகள் என பல புதுமையான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.
பாதுகாப்பு, ஸ்டைல், வசதி என அனைத்து விஷயங்களிலும் இன்றைய சந்தைக்கு சவால் விடும் வகையில் எக்ஸ் சி 60 அமைந்திருப்பதாக வல்வோ ஆட்டோவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வண்டியின் விலை ரூ 40.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை ஒரு பொருட்டே இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஏற்கெனவே இந்தியாவின் பல நகரங்களிலிருந்தும் உற்சாகமான விசாரிப்புகள் தொடங்கிவிட்டனவாம். இதுவரை 90 கார்களுக்கு புக்கிங்கும் முடிந்துள்ளதாகவும், விரைவில் இந்திய மார்க்கெட்டின் சொகுசு கார் பிரிவில் 15 முதல் 18 சதவீத இடத்தைப் பிடிப்போம் என்றும் வல்வோ இந்தியா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








