காமன்வெல்த் போட்டிகளுக்கு டாடாவின் 1,800 கார்கள்

By
Tata Cars for Common Wealth Games
டெல்லி: டெல்லியி்ல் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு டாடா நிறுவனம் 1,800 கார்களை வழங்கவுள்ளது.

பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்துச் செல்ல இந்த கார்கள் பயன்படுத்தப்படும்.

இதற்காக 1,800 புதிய கார்களை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிர்வாகத்திடம் டாடா வழங்கும். 12 நாள் போட்டிகள் முடிந்த பின் இந்தக் கார்கள் மீண்டும் டாடாவிடம் ஒப்படைக்கப்படும்.

பின்னர் இந்தக் கார்களை டாடா தனது வாடிக்கையாளர்களுக்கு 20 சதவீத தள்ளுபடியில் 'செகண்ட் ஹேன்ட்' கார்களாக விற்கும்.

இந்த 12 நாள் உபயோகப்படுத்தப்படும் 1,800 கார்களுக்காக டாடாவுக்கு ரூ. 30 கோடியை காமன்வெல்த் போட்டி நிர்வாகம் வழங்கும்.

இந்தக் கார்களில் 1,600 இன்டிகா-இன்டிகோ கார்களும், 100 சுமோக்களும், 50 சபாரி கார்களும், 20 விங்கர்கள், 30 டிரக்குகளும் அடங்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, July 26, 2010, 14:43 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+