தாய்லாந்து கார் தயாரிப்பு திட்டம்-கைவிட்டது டாடா

குறைவான எரிபொருளை பயன்படுத்தும் கார்களைத் தயாரிக்க ஹோண்டா, நிஸ்ஸான், சுசூகி, மிட்சுபிஸி, டயோடா, டாடா ஆகிய நிறுவனங்களுடன் தாய்லாந்து அரசு 2008ம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போட்டது.
குறைந்த விலையிலான இந்தக் கார்களைத் தயாரி்க்கும் திட்டத்தில் பங்கேற்க டாடா நிறுவனமும் ஒப்புக் கொண்டது.
ஆனால், இப்போது எந்தக் காரணத்தையும் கூறாமல் இந்தத் திட்டத்திலிருந்து டாடா விலகியுள்ளது. அதே நேரத்தில் தாய்லாந்தி்ல் யாருடனும் கூட்டு சேராமல் சொந்தமாக கார்களைத் தயாரிக்கும் திட்டத்தை டாடா பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
தாய்லாந்து நாட்டின் மிக அதிகமான கலால் வரி மற்றும் இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் மிக அதிகமான முதலீடு (சுமார் ரூ. 900 கோடி)ஆகியவையே டாடாவின் விலகலுக்குக் காரணம் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் தாய்லாந்தில் தனது நானோ கார்களை விற்க டாடா முன் வந்துள்ளதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications