டயோடாவின் சிறிய கார் எடியோஸ் அடுத்த ஆண்டு அறிமுகம்

இந்தியாவில் இதுவரை சிறிய கார் எதையும் டயோடா அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், இந்தப் பிரிவில் தான் இந்தியாவின் மாபெரும் கார் சந்தை அடங்கியுள்ளது. இதையடு்த்து சிறிய கார் தயாரிப்பில் டயோடா இறங்குகிறது.
இதற்காக பெங்களூர் அருகே பிடுதியில் ரூ. 1,400 கோடி செலவில் தனி தொழிற்சாலையை டயோடா உருவாக்கி வருகிறது. இங்கு ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரிக்க முடியும்.
1.2 லிட்டர், 1.5 லிட்டர் என்ஜின்களுடன் இரு வகையான எடியோஸ் ரக கார்களை டயோடா அறிமுகப்படுத்தவுள்ளது.
பெரிய ரக கார்களி்ல் டயோடாவின் இன்னோவா இந்தியாவில் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்போது கரோலா, கரோலா ஆல்டிஸ், பார்சூனர், லேன்ட்க்ரூயிசர் பிராடோ, பிரியஸ் ஆகிய கார்களை டயோடா இந்தியாவில் தயாரித்து வருகிறது.
இந் நிலையில் தான் சிறிய ரக கார் தயாரிப்பில் குதிக்கிறது.


Click it and Unblock the Notifications








