யுஎஸ்-8 பாப்புலர் மாடல்களை நிறுத்திய டொயோட்டா!

டொயோட்டாவின் புகழ்பெற்ற மாடல்களான கேம்ரி, கரோல்லா போன்ற கார்களும் இதில் அடக்கம். இந்தக் கார்களின் தரம் மற்றும் செயல்பாடுகளில் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவற்றை விற்பனை செய்வதை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக டொயோட்டா அறிவித்துள்ளது.
இந்தக் கார்கள் இந்தியாவிலும், அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியிலும் பெரும்புகழ் பெற்றவை. குறிப்பாக டொயோட்டா உலகின் நம்பர் ஒன் கார் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ் பெரிதும் உதவியவை. இபோபோது திடீரென்று இந்தக் கார்களின் விற்பனையை டொயோட்டாவை தடை செய்திருப்பது ஆட்டோமொபைல் உலகில் பெரும் அதிர்ச்சியலைகளைப் பரவச் செய்துள்ளது.
இந்த 8 மாடல்களிலும் வாடிக்கையாளர்கள் பரவலாகக் கூறியுள்ள குற்றச்சாட்டு, அக்ஸலரேட்டர் திடீரென்று இயங்காமல் நின்று விடுகிறதாம். இதனால் பாதி வழியில் வண்டி நின்றுபோய், விபத்துக்குக் காரணமாகிவிடுகிறதாம்.
இன்னொன்று கிளட்ச் பெடல், அதற்குக் கீழே போடப்பட்டுள்ள மிதியடி ஷீட்டில் சிக்கிக் கொள்கிறதாம். இந்த இரு பிரச்சினைகளால் ஏற்பட்ட விபத்துக்களில் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர் என்ற புகார் காரணமாக, கடந்த ஆண்டு 20 லட்சம் கேம்ரி மற்றும் கரோல்லா கார்களை திரும்பப் பெற்று பிரச்சினையைச் சரி செய்து கொடுத்தது டொயோட்டா.
ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகள் ஓய்ந்தபாடில்லை.
வாடிக்கையாளரின் பாதுகாப்பு மிக முக்கியம் என்று அறிவித்துள்ள டொயோட்டா, இந்த ஆண்டு அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ள 2.3 டொயோட்டா ரகக் கார்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. மேலும் 8 மாடல்களை தற்காலிகமாக உற்பத்தி செய்வதில்லை என்றும் முடிவு செய்துள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள கார் மாடல்கள்:
RAV4, கரோல்லா 2009-2010, மாட்ரிக்ஸ் 2005-2010, அவலான் 2005-2010, சர்டெய்ன் 2007-2010 கேம்ரி, ஹைலாண்டர் 2010, தூந்தரா 2007-2010, செகோயா 2008-2010.


Click it and Unblock the Notifications








