8.7 லட்சம் மினி வேன்களை திரும்ப பெற்ற டொயோட்டா!

By
Toyota Sienna
சிகாகோ: டொயோட்டா நிறுவனம் தனது 8,70,000 சியன்னா மினி வேன்களை அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.

டயர்களின் ரிம்கள் மற்றும் கேபிள்களில் துருப்பிடிப்பதால் பல பிரச்சினைகள் வருவதாக புகார்கள் வந்துள்ளதையடுத்து இந்த மினிவேன் மாடல் கார்களை டொயோட்டா திரும்பப் பெற்றுள்ளது.

இந்த வண்டிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றை விரைவில் எட்டிவிடுவோம் என்றும், தீர்வு கிடைத்ததும் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி வாகனங்களைப் பெற்றுக் கொள்ளச் சொல்வோம் என்றும் யொடோட்டா அறிவித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தனது பல்வேறு தயாரிப்புகளைத் திரும்பப் பெற்று பிரச்சினைகளைச் சரி செய்து வருகிறது டொயோட்டா. இதற்காக அமெரிக்க அரசு பெரும் தொகையினை அபராதமாகவும் விதித்துள்ளது. இதுவரை கார்களில் இருந்த பிரச்சினையால் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தவர் குடும்பத்தினர் சார்பில் டொயோட்டா மீது 97 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கார்களில் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் 135 வழக்குகள் தொடர்ந்துள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் 600000 மற்றும் கனடாவில் 270000 சியன்னா மினி வேன்களைத் திரும்பப் பெற்றுள்ளது.

சில தினங்களுக்கு முன்புதான் டொயோட்டா தனது லெக்ஸஸ் ஜிஎக்ஸ் 460 ரகக் கார்கள் விற்பனையை முற்றாக நிறுத்தியது நினைவிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, April 17, 2010, 16:38 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+