மும்பை: மோனோ ரயில் சோதனை வெற்றி!

இந்தாண்டு இறுதியில் மும்பையில் மோனோ ரயில் ஓடத் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல் அண்ட் டி மற்றும் மலேசியாவின் ஸ்கோமி குழுமம் இணைந்து மும்பை மாநகரத்தில் ரூ.2,460 கோடி செலவில் மேற்கொண்டு வரும் மோனோ ரயில் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் இந்தாண்டு இறுதியில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையின் வாடலாவில் இருந்து மாஹல் வழியாக செம்பூர் வரை சுமார் 9 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்படும் மோனோ ரயில் பாதை முதல்கட்டமாக முடிவடையும் நிலையில் உள்ளது.
இரண்டாம் கட்டமாக காட்கே மஹராஜ் சவுக் முதல் வாடலா வரை 11 கி.மீ தூரத்திற்கு மோனோ ரயில் பாதை அமைக்கப்படும்.
இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு மும்பையில் நேற்று மோனோ ரயிலின் சோதனை ஓட்டம் நடத்தி பார்க்கப்பட்டது.
வாடலாவில் இருந்து பக்தி பார்க் காம்ப்பிளக்ஸ் வரை சுமார் 108 மீட்டர் தூரத்துக்கு மோனோ ரயில் வெற்றிகரமாக இயக்கி சோதிக்கப்பட்டது.
மஹாராஷ்டிரா முதல்வர் அஷோக் சவான் முன்னிலையில் மோனோ ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற எல் அண்ட் டி துணை தலைவர் ஷைலேந்திர ராய் கூறுகையில், 'முதல்கட்ட மோனா ரயில் பாதைக்கான பணிகள் வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக முடிவடையும்.
2ம் கட்ட பாதை 2011 டிசம்பர் மாதத்தில் முடிவடையும். ஆரம்ப நிலையில் 4 பெட்டிகள் கொண்ட 14 மோனோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.


Click it and Unblock the Notifications








