இந்தியாவில் சிறிய கார்களை தயாரிக்க வோக்ஸ்வேகன் திட்டம்

இப்போது ஸ்கோடா பேபியா, போலோ ஆகிய நடு்த்தர ரக காரை இந்தியாவில் விற்று வரும் இந்த நிறுவனம் அதைவிட சிறிய, விலை குறைந்த காரை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஸ்கோடா ரகததைச் சேர்ந்த ஆக்டேவியா, லாரா, சூப்பர்ப் ஆகிய பெரிய கார்கள் இந்தியாவில் மிகப் பிரபலமாக உள்ள நிலையில் சிறிய கார்கள் தயாரிப்பு பக்கம் கவனத்தை திருப்புகிறது இந்த நிறுவனம்.
இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் சிறிய கார்கள் விற்பனையாகி வரும் நிலையில், வோக்ஸ்வேகனும் இந்த ரக கார்களைத் தயாரிக்க தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ஸ்கோடா, ஜெட்டா, பஸ்ஸட், பேபியா, போலோ கார்களை தயாரிக்க இந்தியாவில் ரூ. 3,500 கோடி முதலீடில் பிரமாண்ட தொழிற்சாலையை இந்த நிறுவனம் அமைத்தது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்டுக்கு 1.1 லட்சம் கார்கள் வரை தயாரிக்கலாம்.


Click it and Unblock the Notifications








