வோக்ஸ்வேகன் கார் நிறுவன லாபம் 80% வீழ்ச்சி!

ஜப்பானின் சுசுகி நிறுவனத்தில் இருந்து 20 விழுக்காடு பங்குகளை சமீபத்தில் வாங்கிய வோக்ஸ்வேகன், சர்வதேச ஆட்டோமொபைல் துறையில் கடந்த ஆண்டு மட்டுமல்லாது இந்தாண்டும் மந்த நிலை காணப்படும் என கவலை தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் 2009ம் ஆண்டு நிகர லாபம் 911 மில்லியன் யூரோ மட்டுமே. முந்தைய ஆண்டில் லாபம் 4 ஆயிரத்து 688 மில்லியன் யூரோவாக இருந்தது.
தற்போது சுமார் 80 விழுக்காடு லாபம் குறைந்துள்ளதாக வோக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications