கியர் பிரச்சனை.. திரும்ப பெறப்படும் வோல்வோ கார்கள்!

By
Volvo Car
லண்டன்: வோல்வோ கார்களில் கியரில் தொடர்ச்சியாக பழுதுகள் ஏற்படுவதால், உலகெங்கிலும் புழக்கத்திலுள்ள இந்த மாடல் கார்களில் 29,290யை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

இந்தக் கார்களின் கியர் மாற்றும் லீவரின் பால் ஜாயின்ட் சிலின்டர் பின்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் புகார் செய்திருந்தனர். இது கியர் மாற்றுவதில் ஓட்டுநருக்கு சிரமத்தை ஏற்படுத்தக் கூடியது.

இதுகுறித்து வோல்வோ செய்தித் தொடர்பாளர் பர் ஆகே பெரோஸ்பர்க் கூறுகையில், "வோல்வோ ரகக் கார்களை திரும்பப் பெறும் இந்த முடிவு, 2010 மற்றும் 2011 -ம் ஆண்டு மாடல்களுக்கும் பொருந்தும். குறிப்பிட்ட கியர் பாக்ஸ் பிரச்சினை இருப்பது உண்மைதான் என்றாலும், இதுவரை அதனால் எந்த விபத்தும் நேர்ந்ததில்லை. அதே நேரம் இந்தப் பிரச்சனையை எளிதில் சரி செய்து விடலாம்..." என்றார்.

பிரிட்டனில்தான் அதிக எண்ணிக்கையில் வோல்வோ கார்கள் திருப்பி அழைக்கப்பட உள்ளன. அதாவது 6,708 கார்கள்.

சொந்த நாடான ஸ்வீடன் மற்றும் ஜெர்மனியிலும் அதிக அளவு கார்களை திரும்பப் பெறுகிறது வோல்வோ.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 23, 2010, 17:05 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+