கார்களில் அதிநவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை புகுத்த போட்டா போட்டி

சர்வதேச அளவில் கார் விற்பனை சந்தை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. அதேவேளை, சந்தையில் நிலவும் கடும் போட்டியில் தங்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், புதுப் புது வசதிகளை கார் உற்பத்தி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. தற்போது கார்களில் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்த கார் உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர் கூறியதாவது:
"முழுக்க முழுக்க கார்களுக்காகவே பிரத்யேக சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் மூலம் பல்வேறு வசதிகளை பெற முடியும். தவிர, காரின் பல்வேறு செய்ல்பாடுகளை இந்த சாப்ட்வேர் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
இந்த பிரத்யேக சாப்ட்வேர் அடங்கிய கம்ப்யூட்டர், காரில் பொருத்தப்படும். இது காரின் டேஸ்போர்டில் உள்ள அகலமான திரையுடன் இணைக்கப்படும். இந்த கம்ப்யூட்டர் மூலம், ஆன்டிலாக்கிங் பிரேக் சிஸ்டத்தை கட்டுப்படுத்த முடியும்.
காரின் எஞ்சின் ஹார்ஸ்பவரை கூட்ட முடியும். எரிபொருள் சிக்கனத்திற்காக காரின் எஞ்சினில் மாற்றங்களும் செய்யலாம். பார்க்கிங் லாட்டுகளி்ல் பார்க்கிங் செய்யும்போது,கியர் மற்றும் பிரேக் அமைப்புகளை கம்ப்யூட்டர் மூலம் மாற்றி அமைக்கலாம்.
வாகனங்களுடன் மோதும் நிலை ஏற்பட்டால்,அதுபற்றி முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பமும் இந்த கம்ப்யூட்டரில் அடங்கியுள்ளது. பயணத்தி்ன்போது காரில் பிரச்சினை ஏற்பட்டால்,அதை காரில் பொருத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டர் மூலம் எளிதில் கண்டறியலாம்.
இதுதவிர,ஜி.பி.எஸ்.,தொழில்நுட்பம் கொண்ட வயர்லெஸ் போனும் காரில் இணைக்கப்படும். இந்த போன் மூலம் கார் சர்வீஸ் மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும்,செல்போனில் உள்ளது போன்று, இதிலும் ரூட் மேப் வசதியை பெற முடியும்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








