மே மாதத்தில் மாருதி கார் விற்பனையில் சுணக்கம்

கடந்த மாதம் மாருதி நிறுவனம் 1,04,073 கார்களை விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த ஆண்டு மேமாதத்தில் மாருதி நிறுவனம் 1,02,175 கார்களை விற்பனை செய்திருந்தது. இதை ஒப்பிடும்போது மாருதியின் விற்பனை வளர்ச்சி எதிர்பார்த்த அளவு இல்லை.
மேலும், மாருதி கார்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு மேமாத்தை காட்டிலும், கடந்த மாதம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு மேமாத்தில் அந்த நிறுவனம் 12,134 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த மாதத்தில் வெறும் 10,554 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
இருந்தாலும், உள்நாட்டு விற்பனை சற்று கூடுதலாக இருந்ததால், மாருதியின் மொத்த கார் விற்பனை சற்று ஏற்றம் பெற்றது. கடந்த மாதம் உள்நாட்டில் 93,519 கார்களை விற்பனை செய்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








