அறிமுகம் ஆகாமலே இதுவரை 38,000 ஸ்விப்ட் கார்கள் புக்கிங்

Maruti Swift
டெல்லி: மேம்படுத்தப்பட்ட வடிவமைப்புடன் வரும் புதிய ஸ்விப்ட் கார் வரும் ஆகஸ்ட் 17ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், இதுவரை 38,000 கார்களுக்கு மேல் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக மார்க்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஸ்விப்ட் காரின் வசதிகள் மற்றும் விலை உள்ளிட்ட எந்த விபரங்களையும் மாருதி இதுவரை வெளியிடாத நிலையில், புதிய ஸ்விப்ட் காரை வாடிக்கையாளர்கள் கண்ணைமூடிக்கொண்டு புக்கிங் செய்து வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்த ஒரே ஒரு டீலர் மட்டும் 2,000 ஸ்விப்ட் கார்களை புக்கிங் செய்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

புதிய ஸ்விப்ட் வரவையொட்டி, கடந்த மாதமே பழைய ஸ்விப்ட் காரின் உற்பத்தியை மாருதி நிறுத்திவிட்டது. அதேவேளை, தனது மானேசர் தொழிற்சாலையில் புதிய ஸ்விப்ட் காரின் உற்பத்தியை மாருதி துவங்கிவிட்டது.

இதனால், புதிய ஸ்விப்ட் அறிமுகம் செய்தவுடன் டீலர்களில் டெலிவிரியும் துவங்கும் என கருதப்படுகிறது. மேலும், புதிய ஸ்விப்ட் காருக்கான காத்திருப்பு காலமும்(வெயிட்டிங் பீரியட்)வாடிக்கையாளர்கள் முகம் சுழிக்க வைக்காத அளவுக்கு இருக்கும் என்று மாருதி டீலர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Monday, August 1, 2011, 10:19 [IST]
English summary
The new Maruti Suzuki Swift garners a whopping 38,000+ Bookings India car bikes website reported. Representing the sheer faith that Indian car buyers have in Brand Maruti, the New Maruti Swift is all set to beat every other car, this year, in terms of the sheer number if bookings that it is managing to get. A leading Delhi Maruti Suzuki dealer alone has reportedly clocked around 2,000 bookings, which reflects the kind of hysteria surrounding the new Maruti Swift. With this, the expectations around the new Swift will have multiplied many fold and we can only hope that Maruti, in true blue Maruti style will price the car just right.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+