இந்தியாவில் முதன்முறையாக பார்முலா ஒன் கார் ரேஸ்:அக்டோபரில் நடக்கிறது

F1 Track in India
டெல்லி: இந்தியாவில் முதன்முறையாக பார்முலா ஒன் கார் பந்தயம் வரும் அக்டோபர் மாதம் நடக்கிறது. இதற்காக, டெல்லி அருகே நொய்டாவில் பந்தய பாதை (ரேஸ் டிராக்) அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன.

கார் பந்தய போட்டிகள் மேலை நாடுகளில் வெகுபிரபலமாக நடந்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் கார் பந்தய போட்டிகளுக்கு இதுவரை வரவேற்பு இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஆட்டோமொபைல் துறையின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் அன்னிய கார் நிறுவனங்களின் வருகை காரணமாக இந்தியாவிலும் கார் பந்தய போட்டிகள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன.

நாட்டின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, ஆண்டுதோறும் கார் பந்தய போட்டியை நடத்தி வருகிறது. இதேபோன்று, டாடா நிறுவனம் அண்மையில் புதிய கார் பந்தய அணியை உருவாக்கி அறிமுகம் செய்தது.

இந்தநிலையில், உலகின் முதன்மையான கார் பந்தயமான பார்முலா ஒன் கார் பந்தயம் இந்தியாவில் முதன்முறையாக நடக்க உள்ளது. இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் எனப்படும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

டெல்லி அருகே நொய்டாவில் இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா ஒன் கார் பந்தயத்திற்கான உலகத்தரம் வாய்ந்த ரேஸ் டிராக் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்த பணிகள் முழுமை பெறும் என்று தெரிகிறது.

அதன்பின், இந்த பாதையில் ரேஸ் கார்களை ஓட்டி சோதனைகள் நடத்தப்படுகின்றன. வரும் அக்டோபர் மாதம் 29 ந்தேதி துவங்க உள்ள இந்த போட்டிகள் இந்திய கார் பந்தய வீரர்கள் மட்டுமின்றி, உலக முழுவதும் உள்ள கார் பந்தய ரசிகர்களிடத்தும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 1, 2011, 13:42 [IST]
English summary
India will host the first Indian Formula 1 GP. Its really an historic event as its the first time India will hoist such an event, starts from October 29th this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+