மே மாதம் முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையில் தொய்வு

India Auto Industry
டெல்லி: பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன்களுக்கான வட்டி உயர்வு போன்ற காரணங்களால் கடந்த மேமாதம் முன்னணி நிறுவனங்களின் கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. மாருதி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை.

மாருதி சுஸுகி:

கார் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள மாருதி நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த மாதம் 1.9 சதவீத வளர்ச்சியை பெற்றது. உள்நாட்டு விற்பனை வளர்ச்சியை பெற்ற போதிலும், அந்த நிறுவனத்தின் ஏற்றுமதி சரிவை கண்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ்:

கார் ஏற்றுமதியில் முதலிடத்திலும், மொத்த கார் உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும் உள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் விற்பனை வளர்ச்சியும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.

கடந்த மாதம் மொத்தமாக 46,808 கார்களை விற்பனை செய்துள்ள அந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 2 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதேவேளை, உள்நாட்டு விற்பனை 14.6 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

டாடா மோட்டார்ஸ்:

கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை நல்ல வளர்ச்சி கண்டபோதிலும், கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. கடந்த ஆண்டு மேமாதம் 21,324 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மேமாதம் 19,401 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ்:

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனமும் எதிர்பார்த்த விற்பனை வளர்ச்சியை எட்டவில்லை. கடந்த ஆண்டு மேமாதம் 8,225 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் 8,329 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இதனால், விற்பனை 1.3 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

டொயோட்டோ:

கடந்த ஆண்டு மேமாதத்தைவிட, கடந்த மாதம் கார் விற்பனை 24 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அந்த நிறுவனம் 7,470 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், 3,412 எட்டியோஸ் கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா ஆட்டோ:

மஹிந்திராவை பொறுத்தவரை உள்நாட்டு கார் விற்பனை ஓரளவு வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், அந்த நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள வெரிட்டோ செடான் காரின் விற்பனை 185 வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதம் 1,281 வெரிட்டோ கார்களை அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

ஹோண்டா :

ஹோண்டா சியல் நிறுவனத்தின் கார் விற்பனை 42.61 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு மேமாதத்தில் 4,067 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம் கடந்த மாதம் வெறும் 2,334 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஃபோர்டு:

ஃபோர்டு நிறுவனத்தின் கார் விற்பனையும் சரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு மேமாதத்தில் 8,080 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனத்தால் கடந்த மாதம் 7,046 கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. இதனால், அந்த நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 12.79 சதவீதம் சரிவு கண்டது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 2, 2011, 14:10 [IST]
English summary
Fuel prices and hardening interest rates singed car sales that lost steam and veered towards a slowdown with demand coming down and footfalls falling at showrooms in May.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+