அறிமுகமாகி 2 மாதங்களில் 1000 ஃபோர்டு பியஸ்ட்டா புக்கிங்

Ford Fiesta
கடந்த 2 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு பியஸ்ட்டா மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் 1000 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.

மிட்சைஸ் செக்மெண்ட்டில் வரலாறு காணாத போட்டி ஏற்பட்டுள்ளது. ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, வோக்ஸ்வேகன் வென்ட்டோ மார்க்கெட்டில் ஏக போட்டி இருக்கிறது.

இந்த நிலையில், அற்புதமான குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட ஃபோர்டு பியஸ்ட்டா வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏராளமாக கொண்டுள்ள புதிய பியஸ்ட்டாவின் கம்பீரமான வடிவமைப்பும் வாடிக்கையாளரை கவர காரணமாகி இருக்கிறது.

ஹூண்டாயின் புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள வெர்னா போன்று ஃபோர்டு நிறுவனத்தின் ப்யூச்சர்ஸ்டிக் என்ற எதிர்கால அம்சங்கள் கொண்ட வடிவமைப்பு பிளாட்பார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது.

மிட்சைஸ் செக்மெண்ட்டில் விலை அதிகம் கொண்ட காராக இருந்தாலும் கொடுக்கும் பணத்திற்கு மதிப்புடைய காராக இந்த குளோபல் பியஸ்ட்டா மாறியுள்ளது.

இதனால், கடந்த 2 மாதங்களில் ஃபோர்டு பியஸ்ட்டா 1000 கார்கள் புக்கிங் என்ற சத்தமில்லாமல் கடந்து சாதனை படைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 2, 2011, 14:40 [IST]
English summary
Ford global Fiesta is reccieving good responce from the customers. it has launched last july and it bags 1000 bookings mark in less than two months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+