சூரத்தில் மாருதியின் 1000-வது கார் ஷோரூம் திறப்பு

கார் மார்க்கெட்டில் 50 சதவீத பங்களிப்பை அளித்து வரும் மாருதி நிறுவனம் விரிவாக்கப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெரிய நகரங்களில் போதுமான ஷோரூம் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கை மாருதி கொண்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது டயர்-2 மற்றும் டயர்-3 என்று கூறப்படும் சிறிய நகரங்களில் விற்பனை மையங்களையும், சர்வீஸ் சென்டர்களையும் திறக்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமாகவும், தரமான சேவையை வழங்க முடியும் என்று அந்த நிறுவனம் கருதுகிறது.
இதன் ஒருபகுதியாக சூரத்தில் தனது 1000வது கார் ஷோரூமை நேற்றுமுன்தினம் மாருதி திறந்தது.
மேலும், வரும் 2015ம் ஆண்டுக்குள் தனது விற்பனை மையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இன்னும் 4 ஆண்டுகளில் மாருதி ஷோரூம்கள் எண்ணிக்கை 2,000ஆக உயரும் என்று மாருதி அதிகாரி ஒருவர் கூறினார்.


Click it and Unblock the Notifications








