ஜூனில் மாருதி கார் விற்பனை சரிந்தது

இதுகுறித்து மாருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
" கடந்த மாதம் 80,298 கார்களை விற்பனை செய்துள்ளோம். இதே கடந்த ஆண்டு 88,091 கார்களை விற்பனை செய்திருந்தோம். இதை ஒப்பிடும்போது கார் விற்பனை கடந்த மாதம் 8.8 சதவீதம் சரிவு கண்டுள்ளது.
உள்நாட்டு விற்பனையை பொறுத்தவரையில், கடந்த மாத விற்பனை 3.8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 72.812 கார்கள் விற்பனையாகி இருந்தது. ஆனால், கடந்த மாதம் 70,020 கார்கள் மட்டுமே விற்பனையானது.
ஏற்றுமதி 32.7 வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் 15,279 கார்கள் ஏற்றுமதி செய்ய்பட்டது. ஆனால், கடந்த மாதம் 10, 278 கார்களை மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஸ்ட்ரைக் மற்றும் தொழிற்சாலையில் நடந்த பராமரிப்பு பணிகளால் இரண்டு வாரங்களுக்கு மேல் கார் உற்பத்தி நடைபெறவில்லை. இதனால், அந்த நிறுவனத்துக்கு 12,800 கார்களுக்கு மேல் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டது.
கார் கடன் வட்டி உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, தொழிலாளர் ஸ்ட்ரைக் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், அந்த நிறுவனத்தின் கார் விற்பனை கடந்த மாதம் குறைந்ததாக ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








