ஜூனில் நிசான் விற்பனை அதிகரிப்பு

கடந்த மாதம் அந்த நிறுவனம் உள்நாட்டு சந்தையில் 1,632 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், கடந்த மாதம் அந்த நிறுவனம் 1,609 நிசான் கார்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கடந்த ஆண்டு ஜூனில் அந்த நிறுவனம் வெறும் 77 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிசான் நிறுவனம் இதுவரை 16,688 மைக்ரா கார்களை விற்பனை செய்துள்ளது.
இதுகுறித்து நிசான் மேலாண் இயக்குனர் தலைமை செயல் அதிகாரி கிமிநோபு டோகியூமா கூறியதாவது:
" மைக்ராவிற்கு அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பு உள்ளது. மைக்ராவால் எங்களது நிறுவனத்தின் மொத்த விற்பனை அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் சென்னை ஆலையில் ஒரு லட்சம் மைக்ரா கார்களை உற்பத்தி செய்துள்ளோம். மேலும், புதிய செடான் காரையும் களமிறக்க இருக்கிறோம். இதனால், விற்பனை நல்ல வளர்ச்சியை பெறும் என்று கருதுகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








