அடுத்த மாதம் ஹைவேரியண்ட் புளூயன்ஸ் டீசல்: ரினால்ட் அறிமுகப்படுத்துகிறது

Renault Fluence
நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட புதிய ஹைவேரியண்ட் புளூயன்ஸ் டீசல் மாடலை ரினால்ட் அடுத்த மாதம் அறிமுகப்படுத்துகிறது.

கடந்த 3 மாதங்களுக்கு முன் புளூயன்ஸ் பிரிமியம் செடான் காரை அறிமுகப்படுத்தி இந்திய சந்தையில் தனி ஆவர்த்தனம் துவங்கியது பிரான்சை சேர்ந்த ரினால்ட்.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்ட புளூயன்ஸ் பிரிமியம் செடான் கார் மூலம் தனது பிராண்டு மதிப்பை பரைசாற்றிக்கொண்டது .

இந்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் புளூயன்ஸ் டீசல்(இ-2) மாடலில் பிரிமியம் கார்களில் இருக்கவேண்டிய நவீன வசதிகள் இல்லை.

எனவே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வருகிறது.

குரூஸ் கன்ட்ரோல், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர், ட்வின் ஸோன் ஏர்கண்டிசன், ஆட்டோ ஹெட்லேம்ப், பியேஜ் இன்டிரியர் உள்ளிட்ட அம்சங்களுடன் புதிய புளூயன்ஸ் டீசல் மாடலை ரினால்ட் களமிறக்குகிறது.

புளூயன்ஸ் டீசல் இ-4 என்ற பெயரில் அடுத்த மாதம் புதிய புளூயன்ஸ் டீசல் மாடலை விற்பனைக்கு ரினால்ட் கொண்டு வருகிறது.

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் புளூயன்ஸ் டீசல் இ-2 மாடல் ரூ.12.99 லட்சம் ஆரம்ப விலையில் விற்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில், புதிய டீசல் மாடல் புளூயன்ஸ் தற்போதைய டீசல் மாடலைவிட ரூ.80,000 முதல் ரூ.1,00,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இதன்மூலம், புளூயன்ஸ் விற்பனை கணிசமாக அதிகரிக்கும் என்று ரினால்ட் நம்பிக்கை தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, October 2, 2011, 14:36 [IST]
English summary
French Car maker Renault to launch New high variant diesel Fluence by next month. The New diesel Fluence coming with cruise control, auto viper, auto headlamps and beige interiors. The new variant expected to Rs.80,000 to Rs.1,00,000 costlier than current one.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+