இந்திய கார் சந்தையை பிடிக்க ரெனால்ட் புது முடிவு

பிரான்சை சேர்ந்த ரெனால்ட நிறுவனம்,ஐரோப்பிய வாகன விற்பனை சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம்,கடந்த 2007ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தது.
தனது லோகன் செடான் தயாரிக்கும் பொறுப்பை மஹிந்திராவிடம் வழங்கி, ரெனால்ட் இந்தியாவில் காலூன்றியது. ஆனால்,லோகனுக்கு இந்தியாவில் எதிர்பார்த்த மார்க்கெட் கிடைக்கவில்லை. கடந்த 2007ம் ஆண்டிலிருந்து இதுவரை 46,000லோகன் கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.
தவறான சந்தை யுக்திகள்,கால் டாக்சி நிறுவனங்களுக்கு அதிகமாக விற்பனை செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் லோகன் மாடல் இந்திய மக்கள் மத்தியில் எடுபடவில்லை. இதனால்,ரெனால்ட் நிறுவனம் கடும் அதிருப்தி அடைந்தது. மேலும்,பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து,சிறிய ரக கார் தயாரிக்கும் முயற்சியும் முழுமை பெறவில்லை.
இந்திய கார் விற்பனை சந்தையில்,அதிக இழப்பை சந்திப்பதாக உணர்ந்த ரெனால்ட் நிறுவனம், தாமதமாக விழித்துக்கொண்டுள்ளது. இந்திய சந்தையில் தனக்கென தனி இடத்தை பிடிக்க, விற்பனையில் நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ரெனால்ட் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"இந்திய சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்க, புளுயன்ஸ் செடான் மாடலையும், கோலியோஸ் எஸ்யூவீ மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதில்,கோலியோஸ்,சென்னையில் உள்ள நிசான் நிறுவன தொழிற்சாலையில் அசெம்பிள் செய்ய்ப்படும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் மூன்று மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். சென்னையி்ல் உள்ள தொழிற்சாலையின் உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்க ரூ.4,500 கோடி முதலீடு செய்யப்படும். இதன்மூலம்,ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் தயாரிக்க முடியும்.
விற்பனை உயர்வுக்கு தக்கவாறு அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 70 டீலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். மேலும்,இந்திய சந்தையில் சரக்கு வாகனங்களை அறிமுகம் செய்யும் திட்டமும் உள்ளது,"என்றார்


Click it and Unblock the Notifications








