சொகுசு கார் தயாரிப்பாளர் போர்ச்சே ஆட்டோவை கையகப்படுத்தும் வோக்ஸ்வேகன்

சொகுசு கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் போர்ச்சே நிறுவனம், பல்வேறு மாடல்களில் கார் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தை கையகப்படுத்த ஜெர்மனியை சேர்ந்த மற்றொரு சொகுசு கார் தயாரிப்பாளரான வோக்ஸ்வேகன் முயற்சி செய்து வந்தது.
இந்தநிலையில், போர்ச்சே நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான நடைமுறைகள் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக வோக்ஸ்வேகன் தெரிவித்து்ள்ளது. மேலும், விரைவில் போர்ச்சே நிறுவனத்தை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வோக்ஸ்வேகன் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
"போர்ச்சே நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. விரைவில் ச்ட்ட நடைமுறைகள் முடிந்தவுடன் போர்ச்சே ஆட்டோ வோக்ஸ்வேகன் கட்டுப்பாட்டில் வரும். இதைத்தொடர்ந்து, போர்ச்சே ஆட்டோ வோக்ஸ்வேகனின் 10வது பிராண்டாக மாறும்.
முதலில் போர்ச்சே ஆட்டோவின் முக்கிய தொழிற்சாலையின் 49.9சதவீத கட்டுப்பாட்டை வோக்ஸ்வேகன் எடுத்துக்கொள்ளும். பின்னர் படிப்படியாக போர்ச்சே ஆட்டோ முழு அளவில் கையகப்படுத்தப்படும்,"என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








