புதிய கார்களுக்கு 95% இந்திய பாகங்களை பயன்படுத்த ஜிஎம் முடிவு

GM Car
டெல்லி: புதிய கார் மாடல்களுக்கு முழுக்க முழுக்க இந்திய உதிரிபாகங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது.

செவர்லே பிராண்டில் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரித்து வரும் கார்களுக்கு இந்திய வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும், அதிக கார் மாடல்களையும் தனது கைக்குள் வைத்திருப்பதால், அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், சந்தை போட்டியை சமாளிக்கும் விதமாக அடுத்தடுத்து புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அந்த புதிய கார்களுக்கு 95 சதவீதம் இந்திய உதிரிபாகங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சிறு தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழா ஒன்றில் பேசிய ஜெனரல் மோட்டார்ஸ் உதிரிபாகங்கள் சப்ளை பிரிவு துணைத் தலைவர் அஸ்வானி கூறுகையில்," புதிதாக அறிமுகப்படுத்தப்படும் கார்களுக்கு உள்நாட்டு உதிரிபாகங்களின் அளவை 95 சதவீதம் உயர்த்த திட்டமிட்டு இருக்கிறோம்," என்றார்.

உள்நாட்டு உதிரிபாகங்களை பயன்படுத்துவதன் மூலம், கார்களை சரியாகவும், குறைந்த விலையிலும் விற்க முடியும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 3, 2011, 17:25 [IST]
English summary
The Indian unit of the US based leading auto maker General Motors announced on Thursday that it plans to source about 95 percent of the components locally for its new car models. While speaking to reporters at an event of Federation of Indian Micro and Small and Medium Enterprises (FISME), in Faridabad, Mr. Ashwani Muppasani, vice president, global purchasing and supply chain, General Motors India said, "The percentage of locally sourced parts and components in new vehicles can be as high as 95 percent."
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+