கார் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது டொயோட்டோ

Toyota
டெல்லி: அனைத்து மாடல் கார்களின் விலையையும், ரூ.20,000 வரை உயர்த்தியுள்ளது டொயோட்டோ கிர்லோஸ்கர் நிறுவனம்.

கார் உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால், கார் விலையை உயர்த்த பல முன்னணி கார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த வரிசையில், முதலில் விலை உயர்வை அறிவித்துள்ளது டொயோட்டோ கிர்லோஸ்கர்.

இதுகுறித்து டொயோட்டோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளதால், அனைத்து மாடல் கார்களின் விலையை 1 முதல் 1.5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதையடுத்து, இன்னோவா காரின் விலை ரூ.12,557 முதல் ரூ.18,424 வரை உயர்கிறது.

இதேபோன்று, கரோல்லா ஆல்டிஸ் டீசல் காரின் விலை ரூ.14,000 முதல் ரூ,17,700 வரை விலை உயர்கிறது. கரோல்லா ஆல்டிஸ் பெட்ரோல் காரின் விலை ரூ.10,400 முதல் ரூ.14,500 வரை உயர்கிறது.

பார்ச்சூனர் எஸ்யூவீ மாடலின் விலை ரூ.20,000 உயர்த்தப்படுகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 3, 2011, 15:14 [IST]
English summary
Toyota Kirloskar motor, the Indian subsidiary of the Japanese auto giant Toyota Motor Company, revealed in a statement that it has increased the pricing of its key models by 1 - 1.5 percent effective from April 1, 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+