ரூ.11.61 லட்சத்தில் 2 வீல் டிரைவுடன் ஆரியா: டாடா அறிமுகம்

கடந்த ஆண்டு நவீன தொழில்நுட்ப அம்சங்களின் சங்கமமாக கொண்ட 4*4 ஆரியா காரை டாடா அறிமுகம் செய்தது. வடிவமைப்பும் கம்பீரமாக இருந்ததால், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், விலையை கேட்ட வாடிக்கையாளர்கள் வேறு ஷோரூம்கள் பக்கம் கவனத்தை திருப்பிவிட்டனர். இதனை உணர்ந்து டாடா தற்போது ரூ.11.61 லட்ச்சத்தில் புதிய இரண்டு வீல் டிரைவ் கொண்ட ஆரியாவை அறிமுகம் செய்துள்ளது.
4*4 ஆரியாவில் இருந்த பல ஸ்டான்டர்டு தொழில்நுட்ப வசதிகளை டாடா மோட்டார்ஸ் பிடுங்கி எறிந்துவிட்டு புதிய ஆரியாவின் விலையை ஒரு லட்சம் ரூபாய் வரை குறைத்துள்ளது டாடா. புதிய ஆரியாவில் ஆன்ட்டி லாக்கிக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 2-டின் மியூசிக் சிஸ்டம் மட்டுமே ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கிறது.
மழை வந்தால் தானாகவே தெரிந்துகொண்டு இயங்கும் சென்சாருடன் கூடிய தானியங்கி வைப்பர், இருளில் தானாகவே ஒளிரும் லைட்டுகள் என ஹைடெக் அம்சங்கள் இருக்கிறது. இதில், 2.2 லிட்டர் காமன் ரெயில் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 140 பிஎஸ் பவரையும், 320என்எம் டார்க்கையும் கொடுக்க வல்லது.
பிரெஸ்டீஜ், ப்ளஷர், ப்யூர் ஆகிய மூன்று மாடல்களில் புதிய 4*2 ஆரியா கிடைக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. புதிய ஆரியாவுக்கு ரூ.11.61 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








