மீண்டும் சூடுபிடிக்கிறது நானோ விற்பனை!

By
Tata Nano
நவம்பர் மாதம் வெகுவாகக் குறைந்து போயிருந்த டாடா நானோ விற்பனை, டிசம்பரில் மீண்டும் உயர்ந்துள்ளது.

உலகின் மிகக் குறைந்த விலைக் கார் என வர்ணிக்கப்பட்ட டாடா நானோ விலை ஆரம்பத்தில் ரூ 1 லட்சம் என்று கூறப்பட்டது. ஆனால் ரூ 136000 ஆகிவிடுகிறது வண்டி கைக்கு வருவதற்குகள். சென்னை போன்ற நகரங்களில் மேலும் கூடுதலாக ரூ 10000 வைத்திருக்க வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த காருக்கு மிக அதிக தேவை இருந்தது. ஆனால் கார் வெளியான பிறகு அதில் உள்ள குறைகள் பரவலாகத் தெரிய வந்ததால் தேவை குறைந்தது. ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 6 நானோக்கள் தீப்பிடித்து முழுவதுமாக எரிந்தன.

அடுத்து நானோ விலையையும் உயர்த்தியது டாடா மோட்டார்ஸ். எனவே மக்களின் வாங்கும் ஆர்வம் வெகுவாகக் குறைந்தது. கடந்த அக்டோபர் மாதம் விற்பனை குறைய ஆரம்பித்தது. நவம்பரில் மேலும் குறைந்தது. வழக்கமான விற்பனையில் 10-ல் ஒரு பங்கு கூட விற்பனை நடக்கவில்லை. இதனால் கவலையடைந்த டாடா, இந்தக் கார் மிகவும் பாதுகாப்பானது என்றும், வாரன்டி உறுது குறித்தும் தொடர்ந்து விளம்பரம் செய்து வந்தது.

நானோ வாங்க எளிய முறையில் உடனடி நிதி வசதிக்கும் ஏற்பாடு செய்துள்ளது டாடா. இதன் பலனாக, இப்போது மீண்டும் டாடா நானோ விற்பனை உயர்ந்துள்ளது. நவம்பர் மாதம் வெறும் 509 காராக இருந்த நானோ விற்பனை டிசம்பர் மாதம் 5,784 ஆக உயர்ந்துள்ளது.

வரும் ஜூன் மாதத்துக்குள் நானோ தயாரிக்க புதிய தொழிற்சாலை திறக்கிறது டாடா. இதில் ஆண்டுக்கு 250000 கார்கள் தயாரிக்க முடியும். இதன் மூலம் நாட்டில் உள்ள 874 விற்பனை மையங்களிலும் நானோ தடையின்றி கிடைக்கும் என டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, January 3, 2011, 17:27 [IST]
English summary
Tata Motors Ltd.’s Nano, the world’s cheapest car, went on sale nationwide in India today after lengthier warranties and easier financing helped sales rebound from a record low. Sales last month rose to 5,784 from 509 in November, according to a Jan. 1 statement from Tata.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+